தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லருக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம்!

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

Update: 2023-04-30 09:46 GMT

திருவனந்தபுரம்,

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று அந்த ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இப்படம் வரும் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லருக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது. சங்க பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது என்பதை, ட்ரெய்லரை பார்க்கும் போது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்