சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வாலிபர் கைது

சாக்லெட் வாங்கி தருவதாக சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.;

Update:2025-12-15 05:02 IST

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் மாவல் தாலுகாவை சேர்ந்த 5 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று சிறுமி வீட்டருகே பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் அவளது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியின் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், 32 வயது வாலிபர் ஒருவரின் அடையாளம் தெரியவந்தது.

அவரை பிடித்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சிறுமியை அவர் சாக்லெட் வாங்கி தருவதாக அழைத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பலாத்காரம் செய்ததும், மேலும் நடந்ததை வெளியே சிறுமி சொல்லிவிடுவாள் என்ற பயத்தில் அவர் சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் வாலிபரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்