உத்தரப்பிரதேசம்: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது!

உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.;

Update:2022-06-05 06:53 IST

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது,

குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி, இசத்நகர் காவல் நிலையப் பகுதியில் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருவகிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குற்றவாளி, கடந்த 2 ஆம் தேதி சிறுமியை பயிற்சி வகுப்புக்கு வருமாறு தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் சிங் சஜ்வான் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்