மைக்ரோசாப்ட் உடன் இணைந்து கணினி திறன்களில் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி- மத்திய அரசு முடிவு

இந்த பயிற்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கு பெற உள்ளனர்.

Update: 2022-08-10 17:31 GMT

Image Courtesy: AFP

புதுடெல்லி,

அரசு ஊழியர்கள் நவீன கால டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், அவர்களின் கணினி கல்வியறிவை மேம்படுத்துவதற்கும் மைக்ரோசாப்ட் மற்றும் இந்திய அரசு இணைந்து பயிற்சி திட்டத்தை வழங்க இருக்கிறது. இந்த பயிற்சியில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE), மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

"திறன் உருவாக்கம்" என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நோக்கம் யாதெனில் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு திறமையான மற்றும் பயனுள்ள சேவைகளை டிஜிட்டல் முறையில் அரசு ஊழியர்கள் மூலமாக வழங்குவதாகும்.

இந்த திட்டத்தின் மூலம், முக்கிய டிஜிட்டல் திறன்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், டிஜிட்டல் இந்தியாவின் பார்வையை விரிவுபடுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் குழுத் தலைவர் அசுதோஷ் சாதா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்