லடாக்கில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.;

Update:2023-06-09 03:43 IST

லே,

லடாக்கில் நேற்றைய தினம் இரவு 10.22 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்