ஒடிசா: ராயகடா ரெயில் நிலையத்தில் 'ரெயில் பெட்டி உணவகம்' திறப்பு

ராயகடா ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில் பெட்டி உணவகம் திறக்கப்பட்டுள்ளது.;

Update:2023-10-12 03:38 IST

Image Courtesy : @RailMinIndia

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ராயகடா ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில் பெட்டி உணவகம் திறக்கப்பட்டுள்ளது. பழைய குளிர்சாதன வகுப்பு பெட்டி ஒன்றில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தை ஒடிசா சட்ட மந்திரி ஜெகன்னாத் சரக்கா தொடங்கி வைத்தார். ராயகடா தொகுதி எம்.எல்.ஏ. மகரண்டா முதுலி, ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஒப்பந்த முறையில் ஒரு தனியார் நிறுவனம் இந்த ரெயில் பெட்டி உணவகத்தை நடத்துகிறது. ரெயில் பயணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இது திறக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான உணவகம் அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தருவதோடு, ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் வாய்ப்பை உருவாக்குவதாக இருக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ரெயில் நிலையத்தின் தோற்றமும் மேம்படும் என்று அவர்கள் கூறினர்.



Tags:    

மேலும் செய்திகள்