ஒடிசா: ரூர்கேலாவில் காலரா தொற்று பரவல் - நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ரூர்கேலா நகரத்தில் நோய் பரவல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2023-12-19 21:14 GMT

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் கடந்த 7 நாட்களில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூர்கேலா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களில் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர்களுக்கு காலரா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரூர்கேலா நகரத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒடிசா மாநில சுகாதாரத்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர்கள் ரூர்கேலா நகருக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளனர். இது குறித்து ரூர்கேலா மாநகர கமிஷனர் சுபாங்கர் மகாபத்ரா கூறுகையில், மாநகரம் முழுவதும் குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்பட்டு, நோய் பரவல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்