ஈரானில் சிக்கிய 17 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை - வெளியுறவுத்துறை மந்திரி

ஈரானால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய மாலுமிகளை அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.

Update: 2024-04-15 22:21 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஈரான்-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் தாக்குதல் கவலை அளிப்பதாக உள்ளது. இருதரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இதற்கிடையே 17 இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் ஒன்றை ஈரான் ராணுவம் தன்வசம் பிடித்து வைத்துள்ள தகவல் எங்களுக்கு கிடைத்தது. உடனே நான் நேற்று (நேற்று முன்தினம்) இரவு ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

அந்த கப்பலில் சிக்கியுள்ள 17 இந்திய மாலுமிகளையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அங்குள்ள நமது தூதரக அதிகாரிகளை அந்த இடத்திற்கு சென்று இந்தியர்களை சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். இது தான் எனது முதல் திருப்திகரமான நிலை. 2-வதாக இந்தியர்களை பத்திரமாக விரைவாக இந்தியா அழைத்து வரவேண்டும். ஈரான் நாடு சாதகமான பதிலை கூறியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு உறுதியான பதிலடி கொடுக்கிறோம். ரஷியா-உக்ரைன் இடையே போர், இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் போன்ற உலக நெருக்கடியான தருணத்தில் நமது நாட்டில் வலுவான தலைமை தேவை. அதனால் தான் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்