இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2-வது நேரடி விற்பனை நிலையம் - டெல்லியில் திறப்பு
டெல்லியில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையத்தை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தொடங்கி வைத்தார்.;
Image Courtesy : @tim_cook twitter
புதுடெல்லி,
இந்தியாவில் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஓ) டிம் குக் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் 2-வது நேரடி விற்பனை நிலையத்தை, டெல்லியில் இன்று டிம் குக் தொடங்கி வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு ஐ-போன் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய டிம் குக், வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.