சட்டசபை கூட்டத்தை 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தன.

Update: 2023-07-21 18:45 GMT

பெங்களூரு:

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தன.

சட்டசபை கூட்டம் புறக்கணிப்பு

கர்நாடக சட்டசபை கூட்டம் நடைபெற்று வந்தது. கடந்த 19-ந் தேதி பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதை கண்டித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தின. அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள், தங்களிடம் இருந்த காகிதங்களை கிழித்து துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி மீது எறிந்தனர். இதையடுத்து பா.ஜனதா உறுப்பினர்கள் ஆர்.அசோக், அரக ஞானேந்திரா, சுனில்குமார் உள்பட 10 பேரை சபாநாயகர் யு.டி.காதர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த இடைநீக்க உத்தரவை கண்டித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் சட்டசபையை புறக்கணித்து வெளியில் தர்ணா போராட்டம் நடத்தினர். கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து புகாரும் அளித்தனர். இந்த நிலையில் பா.ஜனதா உறுப்பினர்கள் நேற்று 2-வது நாளாக சட்டசபை கூட்டத்தை புறக்கணித்து விதான சவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இருக்கைகள் காலி

அப்போது அவர்கள் அரசுக்கு எதிராகவும், சபாநாயகருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்ததால், எதிர்க்கட்சிகளின் இருக்கைகள் காலியாக கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்