பா.ஜனதா கவுன்சிலர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
கொள்ளேகால் புதிய பஸ் நிலையத்தை திறக்க கோரி பா.ஜனதா கவுன்சிலர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர்.;
கொள்ளேகால்-
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டது. அந்த பஸ் நிலையம் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த பஸ் நிலையத்தை திறந்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரி கொள்ளேகால் நகரசபை பா.ஜனதா கவுன்சிலர்கள் மதுசந்திரா, கவிதா ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் கொள்ளேகால் டவுன் பா.ஜனதா நிர்வாகிகள் ரமேஷ், சங்கர், ஜெகதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள்.