வாரணாசி விமான நிலையம் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வாரணாசி சென்றுள்ளார்.

Update: 2024-02-22 17:51 GMT

வாரணாசி,

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ளநிலையில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்காக வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்துக்கு இன்று இரவு பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

நாளை வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்வதந்திர சபாகரில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

தொடர்ந்து துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் பூஜை செய்து தரிசனம் செய்கிறார். காலை 11.30 மணியளவில், துறவி குரு ரவிதாசின் 647-வது பிறந்த நாளை நினைவு கூறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். பிற்பகல் 1.45 மணிக்கு வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.



Tags:    

மேலும் செய்திகள்