ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-29 19:50 GMT

புதுடெல்லி,

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் 17.1 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிபெற்றது. இதன் மூலம், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.

இந்த நிலையில் ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற யு-19 இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஜூனியர் டி20 உலக கோப்பை வென்று சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். அவர்களின் வெற்றி வரவிருக்கும் பல கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும். குழுவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்