இமாச்சலபிரதேசம் மணாலியில் கடும் பனிப்பொழிவு; சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு

மணாலியில் உள்ள ஓட்டல்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.;

Update:2026-01-25 20:40 IST

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் உள்ள மணாலி பகுதி சுற்றுலா தலமாகும். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர். இந்த நிலையில் மணாலி பகுதியில் கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

மணிக்கணக்கில் வாகனங்கள் சாலைகளில் நின்று கொண்டே இருக்கின்றன. கோதி - மணாலி இடையே சுமார் 8 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 3 நாட்கள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள்

அங்கு குவிந்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக நிலைமை மேலும் மோசமாகி உள்ளது.

மணாலியில் உள்ள ஓட்டல்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அனைத்து ஓட்டல்களுமே நிரம்பி விட்டதால் அங்கு தங்குவதற்கு இடமில்லாமல் சுற்றுலா பயணிகள் நடு ரோட்டில் தவிக்கிறார்கள். இதையடுத்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடம் தேடி குலுவுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

கடும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலபிர தேசத்தில் 685 சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதிக பட்சமாக பழங்குடியின மக்கள் வசிக்கும் மாவட்ட மான லாகவுல் மற்றும் ஸ்பிதி பகுதியில் 292 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. சம்பா பகுதியில் 132 சாலைகள், மண்டி பகுதியில் 126 சாலைகள், குல்லுவில் 79 சாலைகள், சிர்மவுரில் 29 சாலைகள், சாலைகள், காங்க்ராவில் 4 சாலைகள், உனாவில் 2 சாலைகள், சோலனில் ஒரு சாலை ஆகியவற்றில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை தொடங்கிய போக்குவரத்து நெரிசல், 24 மணி நேரத்திற்கு பிறகும் சரியாகவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களிலேயே சிக்கித் தவித்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

சிம்லாவில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள தல்லி பகுதியை தாண்டி, இந்துஸ்தான்- திபெத் சாலையின் ஒரு பகுதியில் அடர்ந்த பனி காணப்பட்ட தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

உள்ள கின்னவுர் மாவட்டம் முழுமையாகவும், சிம்லா மாவட்டத்தில் நர்கண்டா, ஜூப்பல், கோட்காய், குமார்சைன், கரபதர், ரோக்ரு மற்றும் சோபால் போன்ற நகரங்களும் கடும் பனியால் துண்டிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஜம்மு-காஷ்மீரிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்