இமாசல பிரதேசத்தில் 28-ந்தேதி வரை கடும் பனிப்பொழிவு - வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை

தாழ்வான மலைகள் மற்றும் சமவெளி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-25 21:33 IST

Image Courtesy : ANI

சிம்லா,

இந்தியாவின் வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு நிலவும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இமாசல பிரதேசத்தில் வரும் 26-ந்தேதி(நாளை) இரவு முதல் 28-ந்தேதி காலை வரை பரவலாக மழை மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை முன்னிட்டு இமாசல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு வானிலை மையம் சார்பில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வரும் 27-ந்தேதி இமாசல பிரதேசத்தின் சம்பா, குலு, கின்னோர் மற்றும் லாறல்-ஸ்பிதி ஆகிய உயரமான மாவட்டங்களில், பலத்த மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான மலைகள் மற்றும் சமவெளிகள், அருகிலுள்ள மலைப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்