‘வட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது’ - பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின்
சனாதன மரபுகளை ஊக்குவிக்கும் ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளோம் என நிதின் நபின் தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“பீகாரில் காட்டாட்சி நடந்து கொண்டிருந்தது. மேலும் அங்கு ஒரு அராஜக அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அதை பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இன்று வட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது.
நாட்டில் மூன்று முறை பா.ஜ.க. அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பெருமை பா.ஜ.க. தொண்டர்களையே சாரும். சனாதன மரபுகளை ஊக்குவிக்கும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைத்துள்ளோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.