உறவினருக்கு இருக்கை வேண்டுமெனக் கூறி அமர்ந்திருந்த பெண்ணை எழவைத்த போலீஸ்

உறவினருக்கு இருக்கை வேண்டுமெனக் கூறி அமர்ந்திருந்த பெண்ணை எழவைத்த போலீஸ்காரர் வீடியோ எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனையும் பறிக்க முயற்சி செய்தார்.;

Update:2022-06-14 13:28 IST

புதுச்சேரி

புதுச்சேரி பஸ் நிலையத்தில் அரசு பேருந்தில், இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, போலீஸ்காரர் ஒருவர் தனது உறவினருக்கு இருக்கை வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக எழச் செய்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சென்னை செல்லவிருந்த அந்த குளிர்சாதன பேருந்தில் இருந்த அப்பெண்ணை வலுக்கட்டாயமாக எழச் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் கணவர்போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை வீடியோ எடுத்த இளைஞரின் செல்போனையும் போலீஸ்காரர் பறிக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண், அவரது கணவர், மற்றும் வீடியோ எடுத்த இளைஞர் ஆகிய மூவரையும் போலீஸ்காரர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்ற நிலையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் சமரசம் பேசி மூவரையும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்