ஜம்முவில் 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.;
ஸ்ரீநகர்,
இந்திய எல்லைக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடும் சதித்திட்டத்துடன் பாகிஸ்தான் எல்லப்பகுதியில் பயங்கரவாதிகள் உள்ளனர்.பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை தீவிர ரோந்து பணியின் மூலம் தடுத்து வருகிறது. இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் குளிர்காலத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.பாதுகாப்புப் படைகளின் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களின் உயரமான மலைப்பகுதிகளுக்குள் ஒளிந்துள்ளனர்.
உறைபனி காரணமாக பொதுமக்கள் இருப்பு குறைவாக உள்ள இப்பகுதிகளில், ராணுவம் மலைப்பகுதிகள், காடுகள் மற்றும் தொலைதூர பள்ளத்தாக்குகளில் தொடர்ச்சியான ரோந்து மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகள் இயக்கத்தை கண்காணிக்க ட்ரோன்கள், வெப்ப இமேஜர்கள் மற்றும் தரை உணரிகள் பயன்படுத்தப்பட்டு, சிறப்பு பயிற்சி பெற்ற குளிர்கால போர் பிரிவுகள் பணியில் நிறுத்தப்பட்டுள்ளன.