நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியரின் பெருமைமிக்க அடையாளமாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்;

Update:2025-12-28 15:21 IST

டெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மன் கி பாத்) நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 129-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. 2025ம் ஆண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது, ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்ளும் வகையில் 2025ம் ஆண்டு பல்வேறு தருணங்களை கொடுத்தது. தேசிய பாதுகாப்பு முதல் விளையாட்டு வரை, அறிவியல் ஆய்வகம் முதல் உலகின் பெரிய மேடைகளில் இந்தியா அதன் அடையாளத்தை பதித்துள்ளது.

இந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியரின் பெருமைமிக்க அடையாளமாக மாறியுள்ளது. இந்திய நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது என்பதை உலக நாடுகள் கண்டுள்ளன. ஆபரேஷன் சிந்தூரின்போது ஒவ்வொரு இந்தியரின் நாட்டின் மீது வைத்துள்ள அன்பு வெளிப்பட்டது’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்