கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி - 2 நாட்களுக்குப்பின்மீட்பு
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பெங்களூரு,
கர்நாடகாவின் விஜய்நகர மாவட்டத்தில் ஹம்பி நகரில் அஷ்டபூஜா சனா என்ற மலை உள்ளது. இந்த மலை மீது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புரோனோ ரோஷர் (வயது 52) என்ற சுற்றுலா பயணி கடந்த புதன்கிழமை தனியே ஏறியுள்ளார்.
அப்போது, மலையேற்றத்தின்போது புரோனோ தவறி கீழே விழுந்துள்ளார். இதனால், காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த 2 நாட்களாக உதவிகேட்டு கூட்டலிட்ட நிலையில் அந்த மலையில் யாரும் இல்லாததால் உதவிகிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காலில் பலத்த காயமடைந்த மெல்ல மெல்ல நகர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள வாழைதோட்டத்திற்குள் நுழைந்துள்ளார். வாழைத்தோட்டத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்த சிலர் புரோனோவை நேற்று கண்டுபிடித்தனர். இதையடுத்து, புரோனோவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.