அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு

அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு

Update: 2023-06-12 21:18 GMT

பெங்களூரு:

ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா குசனூரு கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் மது கும்பாரா (வயது 14). இந்த சிறுமி குசனூரு அருகே வாசன கிராமத்தில் உள்ள பள்ளிக்கு, அரசு பஸ்சில் நேற்று மாணவி மது புறப்பட்டு சென்றாள். தற்போது அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாணவி சென்ற பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு பஸ்சில் கூட்ட நெரிசல் காரணமாக படிகட்டு அருகே நின்றபடி மாணவி மது பயணம் மேற்கொண்டு இருந்தாள். இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து மாணவி தவறி விழுந்தாள். இதில், தலையில் பலத்த காயம் அடைந்து அவள் உயிருக்கு போராடினாள். உடனடியாக அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி மது பரிதாபமாக இறந்து விட்டாள். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து ஆதூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்