இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மங்களூருவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினரை போலீசார் தேடிவருகின்றனர்;

Update:2023-08-28 00:15 IST

மங்களூரு

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா டவுன் பகுதியில் 19 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சோ்ந்தவர் ஜெகநாத். இவர் இளம்பெண்ணுக்கு உறவினர் ஆவார்.

ஜெகநாத் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது அவரது வீட்டிற்கு ெஜகநாத் வந்துள்ளாா். பின்னா் வீ்ட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிற்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டாா். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனா். இதனை கண்ட ஜெகநாத் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இதுகுறித்து சுள்ளியா போலீசில் புகார் அளித்தனா்.

அதன்பேரில் சுள்ளியா போலீசாா் ஜெகநாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஜெகநாத்தை போலீசார் தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்