மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை இரண்டுநாள் தாமதத்திற்கு பின் இன்று தொடங்கியது.

Update: 2022-06-11 11:20 GMT

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதன் வழக்கமான தொடக்கத்தை விட இரண்டு நாட்கள் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மராட்டியத்தில் வழக்கமாக பருவமழை வழக்கமாக ஜூன் 9 ஆம் தேதி கொங்கனில் வந்து சேரும். ஆனால், தற்போது இரு நாட்கள் தாமதத்துடன், தென்மேற்கு பருவமழை கொங்கன் மற்றும் மத்திய மத்திய மராட்டியத்தின் சில பகுதிகளில் தொடங்கியுள்ளது.

இதனால், கொங்கனின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும், கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். மேலும், நிலைமைகள் சாதகமாக இருந்தால், பருவமழை அமைப்பு மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார் 

Tags:    

மேலும் செய்திகள்