பெண் போலீசின் சீருடையை கிழித்து ரகளை: கற்பழிப்பு குற்றவாளி-உறவினர்கள் 5 பேர் கைது

போலீஸ் நிலைய அதிகாரிகள் ரகளையில் ஈடுபட்டவர்களை பிடித்ததுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.;

Update:2023-05-09 00:48 IST

பரேலி,  

உத்தரபிரதேசத்தின் சிஷ்கார் போலீஸ் நிலையத்தில் பெண் ஏட்டு ஒருவர் சம்பவத்தன்று பணியில் இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்திற்கு ஷப்பு (வயது 23) என்ற வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 5 பேர் வந்தனர். ஷப்பு மீது, ஒரு இளம் பெண்ணின் தந்தை கற்பழிப்பு புகார் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் தன்னை போலியாக கற்பழிப்பு புகாரில் சேர்த்திருப்பதாக கூறி ஷப்பு மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் பெண் ஏட்டிடம் தவறாக நடந்து, அவரது சீருடையை கிழித்து தகராறு செய்தனர்.

இதையடுத்து போலீஸ் நிலைய அதிகாரிகள் ரகளையில் ஈடுபட்டவர்களை பிடித்ததுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்