கிராபிக் டிசைனர் படிப்பும், வேலைவாய்ப்பும்

கிராபிக் டிசைன் வேலைவாய்ப்பு என்பது சந்தைப்படுத்துதல், விளம்பரம், டிஜிட்டல் கல்வி முறை மற்றும் பொழுதுபோக்கு பொருட்களின் வளர்ச்சி போன்றவற்றால் திறமையான கிராபிக் டிசைனர்களும் வளர்ச்சி பெறுகிறார்கள்.;

Update:2022-11-13 21:52 IST

எந்தவொரு செய்தியையும், காட்சிப்படமாகவோ அல்லது எழுத்துகளாகவோ டிஜிட்டல் கருவிகளின் துணை கொண்டு கலை ரீதியாக இணைத்து உருவாக்கும் ஓர் அற்புதமான கலையே, கிராபிக் டிசைன். இதுசம்பந்தமான படிப்புகள் இந்தியா முழுவதும் மத்திய-மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

தபால் தலைகள் முதல் மோஷன் கிராபிக்ஸ் வரையிலான பல்வேறு ஊடகங்களிலும் வெளியிடப்படும் டிசைன்களின் உருவாக்கத்தில் கிராபிக் டிசைனர்கள் ஈடுபடுகிறார்கள்.

குறிப்பாக இயந்திர கருவி உற்பத்தியாளர்கள், தானியங்கி துறைகள், மரச்சாமான்கள் உற்பத்தியாளர்கள், விருந்தோம்பல் துறைகள், தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வெளியீட்டு நிறுவனங்கள், ஆடை மற்றும் காலணி நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், லாப நோக்கற்ற அமைப்புகள், ரியல் எஸ்டேட் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட களங்களும் வடிவமைப்பு சேவைகளைப் பயன்படுத்துகின்றன.

கிராபிக் டிசைனிங் வேலைவாய்ப்பு என்பது எப்போதும் வாய்ப்புகளை வாரி வழங்கும் துறையாகும். பிராண்டுகள், பொருட்கள் மற்றும் சேவைகள் இவ்வுலகில் இருக்கும் வரையிலும் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் இருக்கும் வரையிலும் கிராபிக் டிசைனர்களின் தேவை தவிர்க்க முடியாதது. சந்தைப்படுத்துதல், விளம்பரம், டிஜிட்டல் கல்வி முறை மற்றும் பொழுதுபோக்கு பொருட்களின் வளர்ச்சி போன்றவற்றால் திறமையான கிராபிக் டிசைனர்களும் வளர்ச்சி பெறுகிறார்கள்.

இத்துறை படிப்புகளை முடித்து பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில், கிரியேட்டிவ் டைரக்டர், பேக்கேஜ் டிசைனர், வெப் டிசைனர், டெஸ்க்டாப் பப்ளிஷர், மல்டி மீடியா டெவலப்பர், விசுவல் இமேஜ் டெவலப்பர், விசுவல் ஜர்னலிஸ்ட், பிராட்காஸ்ட் டிசைனர், லோகோ டிசைனர், இல்லஸ்ட்ரேட்டர், ஆர்ட் டைரக்டர், ஆர்ட் ரொடக்‌ஷன் மேனேஜர் போன்ற மதிப்புமிக்க வேறு பல வேலைவாய்ப்புகள் எண்ணற்ற அளவில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்