புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

கடையநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-13 02:23 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான போலீசார் கடையநல்லூர் தினசரி மார்க்கெட் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் வடக்கு விளை தெருவை சேர்ந்த நடராஜன் மகன் ராஜு (வயது 37) கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கடையநல்லூர் பேட்டை நத்துகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சையது மசூது மகன் நத்தகர் பாதுஷா கடையநல்லூரில் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் பாதுஷா (47) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரிடம் இருந்தும் விற்பனைக்கான பதுக்கி வைத்திருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்