புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-02 00:15 IST

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பெத்தார் தேவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வாசு(வயது 50). இவரும், சோழந்துரையை சேர்ந்த ஆசைத்தம்பியும்(32) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக மோட்டார்சைக்கிளில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தடைசெய்யப்பட்ட 570 புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்