டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
தீபாவளி போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர்;
கோப்புப்படம்
சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை 2023-2024 இல் வழங்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
கடந்த 3-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் 20 சதவீதம் தீபாவளி போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர்