பண பேரம் நடந்தது உண்மை என நிரூபித்தால் பதவி விலகத் தயார் தனியரசு ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவளிக்க, என்னிடம் பணம் பேரம் பேசப்பட்டதாகக் கூறுவதை உண்மை என நிரூபித்தால், பதவி விலகத் தயார் என்று தனியரசு எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-15 05:11 GMT
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக, தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் ஆங்கில ஊடகங்களில் வெளியானது. இந்த விவகாரத்தில் தனியரசு கருணாஸ்,தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதாக சரவணன் பேசுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு, ‘எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்க நான் அவர்களிடம் பணம் வாங்கினேன் என்ற குற்றசாட்டை நிரூபித்தால், நான் என் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அவ்வாறு நிரூபித்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்’ என்று சவால் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்