திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2019-12-11 14:26 GMT
சென்னை,

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கியது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் வார்டு மறுவரையறை போன்றவற்றில் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனையடுத்து இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“உச்ச நீதிமன்ற ஆணைப்படியே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்