மாமல்லபுரத்தில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்; ஆபத்தை உணராமல் குளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்தில் இன்று கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடலில் குளித்தனர்.

Update: 2024-05-26 15:24 GMT

செங்கல்பட்டு,

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, இன்று வார விடுமுறை என்பதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களில் இன்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைப் பாறை, புலிக்குகை ஆகிய புராதன சின்னத்தைப் பார்வையிட்டனர். இதனால் மாமல்லபுரம் இன்று மக்கள் கூட்டத்தால் களைகட்டியது.

அதே சமயம் மாமல்லபுரத்தில் இன்று கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இது குறித்து போலீசார் எச்சரித்தும் சுற்றுலா பயணிகள் பலர் ஆபத்தை உணராமல் தங்களது குழந்தைகளுடன் கடலில் குளித்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்