தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக்கொண்டார்

Update: 2021-09-18 05:25 GMT
சென்னை,

தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், மத்திய அரசு உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய கவர்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர், அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்