இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 04.01.2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2026-01-04 09:25 IST


Live Updates
2026-01-04 12:09 GMT

தஞ்சையில் காலஞ்சென்ற முன்னாள் எம்பி எல்.கணேசனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோரும் திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர் எல்.கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

2026-01-04 11:24 GMT

வெனிசுலா நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்ததன் எதிரொலியாக அண்டை நாடான கொலம்பியாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை வழியாக வெனிசுலா மக்கள் வர வாய்ப்புள்ளதால் கொலம்பியாவின் எல்லையில் ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தம் எல்லை வழியாக வெனிசுலா மக்கள் வர வாய்ப்புள்ளதால் கொலம்பியாவின் எல்லையில் ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். 

2026-01-04 10:15 GMT

வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வு கவலை அளிக்கிறது. சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுலா நாட்டு மக்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்போம். வெனிசுலாவில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் வெனிசுலா - அமெரிக்கா பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

2026-01-04 10:02 GMT

`பெட்டி கடையில் தொடங்கி காட்டு வேலை வரை எல்லா இடங்களிலும் வடஇந்தியர்கள் வந்துவிட்டார்கள். சும்மா இரு காசு தர்றேனு, நம்மை நுட்பமாக உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். இங்கே வாக்குரிமை வாங்குவார்கள், தானாக அவர்களுக்கு அதிகாரம் போய்விடும். ஏற்கெனவே அடிமையாக இருக்கும் நாம் மேலும் அடிமையாகி விடுவோம். நிலமற்றவர்களாக மாற்றப்பட்டு அடித்து விரட்டப்படுவோம். இது 10 வருடத்தில் நடக்கும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

2026-01-04 09:59 GMT

இன்று மாலை புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருச்சி வந்தடைந்தார் அமித்ஷா. அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் பாஜக, அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.நாளை திருச்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா.

2026-01-04 07:55 GMT

10வது நாளாக போராட்டம்

  • சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 10வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
  • நாளை பள்ளிகள் திறக்கும் நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்