தேர்தலில் த.வெ.க. கணிசமான வாக்குகள் பெறும்-கார்த்தி சிதம்பரம்

தேர்தலில் த.வெ.க. கணிசமான வாக்குகளை பெறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.;

Update:2026-01-04 10:05 IST

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். தமிழகத்திற்கு முதல்-அமைச்சர் அதிகமான முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறார். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துவது, மறுவாழ்வு அளிப்பது என இருவழிகளில் கையாள வேண்டும். சட்டம்-ஒழுங்கு நடவடிக்கையினால் மட்டும் போதைப்பொருள் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது. போலீசார் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும்.

நடிகர் விஜய் கட்சிக்கு தேர்தலில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த வாக்குகள் வெற்றியாக மாறுமா? என்பது சந்தேகம் தான். ஒரு பெரிய ரசிகர் மன்றமாக தான் உள்ளது. அந்த ரசிகர் மன்றம் ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சியாக மாறுமா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்