2,200 டன் தவிடு சரக்கு ரெயிலில் வந்தது
நாமக்கல்லுக்கு 2,200 டன் தவிடு சரக்கு ரெயிலில் வந்தது.;
நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படுவதுவழக்கம்.
அதன்படி நேற்று டெல்லியில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,200 டன் தவிடு மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. 42 வேகன்களில் வந்திருந்த தவிடு மூட்டைகள் அனைத்தும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல் மாவட்டம் மற்றும் கேரளாவில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.