3 ஆயிரம் கிலோ நெய் வாங்கி ரூ.18 லட்சம் மோசடி

3 ஆயிரம் கிலோ நெய் வாங்கி ரூ.18 லட்சம் மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update:2023-09-10 02:12 IST


சத்தீஸ்கர் மாநிலம் தாடி பந்த் ராய்ப்பூர் நகரை சேர்ந்தவர் பிரியேஷ் குப்தா (வயது 34). இவர் மதுரை சிக்கந்தர்சாவடியில் நிறுவனம் அமைத்து நெய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரிடம் அரசரடி தேனி மெயின் ரோட்டைச் சேர்ந்த ரஹீம்தாசுதீன் (38) என்பவர் 3 ஆயிரம் கிலோ நெய் வாங்கியுள்ளார். அதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். நெய்யை பெற்றுக்கொண்ட ரஹீம்தாசுதீன் அதற்கான தொகையைக் கொடுக்கவில்லை. இது குறித்து கேட்ட போது அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து பிரியேஷ்குப்தா கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்