சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 30 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 30 கிலோ போதை பொருட்களுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டி.எஸ்.பி. முத்துக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் 8-வது நடைமேடையில் வந்து நின்றது.
அந்த ரெயிலில் வந்த பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது பயணிகளில் சந்தேகப்படும் படியாக இருந்த நபர் ஒருவர் இறங்கி வந்ததை போலீசார் கண்டனர். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து, அவரது பையை சோதனையிட்டனர்.
அப்போது அவர் வைத்திருந்த பையில் 30 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரை சேர்ந்த முகமது அசாருதீன் நூருல்லா (வயது 22) என்பது தெரியவந்தது. ரெயில்வே போலீசார் அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.