காஞ்சீபுரத்தில் அதிவேகமாக வந்த 31 வாகனங்களுக்கு அபராதம்

காஞ்சீபுரத்தில் அதிவேகமாக வந்த 31 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2023-07-26 06:58 GMT

காஞ்சீபுரம், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் சென்னை தெற்கு சரக இணை ஆணையர் முத்து ஆகியோரின் உத்தரவின் படி, காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் காஞ்சீபுரம் வெள்ளை கேட் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த 31 வாகனங்களை கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வாகனங்களுக்கு ரூ.59 ஆயிரம் அபராதம் விதித்து இதுபோன்று மீண்டும் அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறுகையில்:

அதிவேகமே சாலை விபத்தில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது, சாலைகளில் பக்கவாட்டில் வட்டமாக பொருத்தப்பட்டிருக்கும் போக்குவரத்து சின்னத்தில் குறிப்பிடப்பட்ட வேக அளவில்தான் அந்தந்த பகுதியில் செல்லவேண்டும் என்றும் விளக்கமளித்தார்.

மேலும் தணிக்கையின்போது பெரும்பாலான டிரைவர்கள் தாங்கள் சரியான வேகத்தில் தான் வந்தோம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர் பின்னர் ரேடாரின் வேக புகைப்படத்தை பார்த்த பின்னர்தான் தம் தவறை உணர்ந்து, இனி இவ்வாறு செய்யமாட்டோம் என்று உறுதி எடுத்து சென்றார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்