தமிழகத்தில் அரசு வேலைக்கு பதிவுசெய்து காத்திருப்போர் 74 லட்சம் பேர் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல்

தமிழகத்தில் மொத்தம் 73,99,512 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-23 11:44 GMT

சென்னை,

தமிழகத்தில் மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் மொத்தம் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 34 லட்சத்து 53 ஆயிரத்து 380 பேர், பெண்கள் 39 லட்சத்து 45 ஆயிரத்து 861 பேர், மூன்றாம் பாலினத்தவர் 271 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 19-30 வயது வரையிலான பட்டதாரிகள் 29 லட்சத்து 88 ஆயிரத்து 001 பேர், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 23 லட்சத்து 01 ஆயிரத்து 800 பேர், 31-45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 68 ஆயிரத்து 931 பேர், 46-60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 190 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

இதில் பொறியியல் படித்தவர்கள் 3 லட்சத்து 05 ஆயிரத்து 087 பேர் என்றும், அறிவியல் படித்தவர்கள் 6 லட்சத்து 84 ஆயிரத்து 160 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 292 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்