மக்கள் குறைகேட்கும் கூட்டம்

தேனி மாவட்டத்தில் பொதுவினியோகம் தொடர்பாக மக்கள் குறைகேட்கும் கூட்டம் 12-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-11-08 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். அதன்படி வருகிற 12-ந்தேதி பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் மாவட்டத்தில் 5 இடங்களில் நடக்கிறது. பெரியகுளம் தாலுகாவில் கெங்குவார்பட்டி, தேனி தாலுகாவில் ஸ்ரீரெங்காபுரம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் தி.பொம்மிநாயக்கன்பட்டி, உத்தமபாளையம் தாலுகாவில் சீப்பாலக்கோட்டை, போடி தாலுகாவில் சிலமலை ஆகிய இடங்களில் கூட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம், தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கலாம். இத்தகைய புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்