தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படும் அரசு பள்ளி

தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படும் அரசு பள்ளி;

Update:2023-07-23 02:15 IST

குன்னூர்

குன்னூர் அருகே சோகத்தொரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தனியார் அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று பள்ளியில் சிமெண்டு தரைத்தளம் உள்பட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது. இது தவிர மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

மேலும் முன்னாள் மாணவர் தீப்பு சிவயோகி என்பவர் அந்த பள்ளிக்கு 5 மடிக்கணினிகளை வழங்கியுள்ளார். அதன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படும் அந்த அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்