அதிகபட்சமாக கீழ்செருவாயில் 56 மி மீ பதிவு
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கீழ்செருவாயில் 56 மில்லி மீட்டர் மழை பதிவானது;
கடலூர்
மழை
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு 20 நிமிடம் பெய்தது. இருப்பினும் இந்த மழையால தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை அளவு
இதேபோல் அண்ணாமலை நகர், தொழுதூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, லால்பேட்டை, சேத்தியாத்தோப்பு, கீழ்செருவாய், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8:30 மணி வரை முடிவடைந்த மழை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழ்செருவாயில் 56 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக விருத்தாசலத்தில் 1 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 10. 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
தொழுதூர் -23
அண்ணாமலை நகர் -22.4
கொத்தவாச்சேரி -21
லக்கூர் -21
குறிஞ்சிப்பாடி -18
பரங்கிப்பேட்டை -16.7
சிதம்பரம் -15.2
வடக்குத்து -13
ஸ்ரீமுஷ்ணம் -12.3
புவனகிரி -12
பெலாந்துறை -9.8
லால்பேட்டை - 9
காட்டுமன்னார்கோவில் -5.2
சேத்தியாத்தோப்பு - 3.8
கடலூர் -2
கலெக்டர் அலுவலகம் -1.6
குப்பநத்தம் -1.2