காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் நெசவுத்தொழிலாளி தற்கொலை

காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் நெசவுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-03-22 14:57 IST

காஞ்சீரத்தை அடுத்த ஓரிக்கை அண்ணா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமரகுரு (வயது 40). இவர் வீட்டிலேயே நெசவுத்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி.

சமீப காலமாக நெசவுத்தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடன் சுமை அதிகரித்துள்ளது.

கடன் தொல்லையால் விரக்தி அடைந்த குமரகுரு நெசவுத்தொழில் செய்யும் தறி கட்டையில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் விரைந்து சென்று குமரகுரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்