முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

திட்டச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா;

Update:2023-08-14 00:15 IST

திட்டச்சேரி:

திட்டச்சேரி வெள்ளத்திடலில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 9-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்