நாமக்கல்: கல்குவாரியில் லாரி கவிழ்ந்து தொழிலாளி சாவு
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் கல்குவாரியில் 300 அடி பள்ளத்தில் இருந்து மண், கற்களை ஏற்றிக்கொண்டு மேலே வந்த லாரி, பாரம் தாங்காமல் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.;
நாமக்கல் மாவட்டம் பெரிய சூரம்பாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் மாலை 300 அடி பள்ளத்தில் இருந்து ஒரு டிப்பர் லாரி மண், கற்களை ஏற்றிக்கொண்டு மேலே வந்தது. அப்போது பாரம் தாங்காமல் அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த லோடு மேன் சுப்பிரமணி (வயது 64) மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த டிரைவர் வேணுகோபால் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த சுப்பிரமணி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கோபிநத்தம் ஊரை சேர்ந்தவர் ஆவார்.