தீபாவளியையொட்டி சென்னை-நெல்லை இடையே கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் 10, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

Update: 2023-11-07 16:03 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னை-நெல்லை இடையே கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் 9, 16, 23 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதே போல் சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் 10, 17, 24 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி, சாத்தூர், திருவாரூர், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ரெயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்