நடைப்பயணத்தால் அண்ணாமலை உடல் நலம் சீராகும் - சீமான்
நடைப்பயணத்தால் அண்ணாமலை உடல் நலம் சீராகுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்கிறார். அவரது நடைப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது;
"அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணம் பழைய மாடல். நடைப்பயணத்தால் அவரது உடல்நலம் சீராகும். பத்தாண்டு காலை நாட்டை ஆண்டு குட்டிச்சுவராக்கிவிட்டு நடைப்பயணம் மேற்கொள்வதால் எதுவும் நடக்காது." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.