அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-18 01:00 IST

தர்மபுரி:

பென்னாகரம் அருகே உள்ள கூத்தபாடியைச் சேர்ந்தவர் வீரப்பன் (வயது 44). அரசு பஸ் டிரைவர். இவர் தர்மபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் பஸ்சை ஓட்டி சென்றார். குமாரசாமிபேட்டை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த சவுளுபட்டியை சேர்ந்த அதியமான் (30) என்பவர் பஸ்சை வழிமறித்து எதற்காக பஸ்சை சாலை ஓரத்தில் நிறுத்தினீர்கள் என்று கூறி டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வீரப்பன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதியமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்