தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்;
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த பகுதிகளில் தொடர்ந்து டாஸ்மாக் கடை, கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடு போனது. இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் விசாரணை நடத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட கண்டாரமாணிக்கத்தைச் சேர்ந்த கார்த்தி (வயது 26), காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.