ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடந்தது.;
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், ஜூலை 1-ந் தேதி தேர்த்திருவிழாவும் நடக்கிறது.